Friday, January 10, 2014

தமிழனை நல்லவன் என்று பார்பதா இல்லை இளிச்சவாயன் என்று பார்பதா?

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று பலமுறை பலர் சொல்லி கேட்டிருக்கிறேன் நானும் பார்த்தும் இருக்கிறேன். வேறு மாநிலத்தவர் தமிழகத்தில் அரசியல், தொழில், வேலைவாய்ப்பு என பல துறைகளில் தங்கு தடை ஏதும் இன்றி கொடிகட்டி பறப்பதை நானும் பல இடங்களில் பார்த்து இருக்கிறேன்.

ஆனால் அந்த நிலை நமக்கு வேறு மாநிலங்களில் நிச்சயம் கிடையாது என்பதை எனது கடந்த 7 வருட வேற்று மாநில வாசம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இதுவரை நான் வேறு வேறு மூன்று நிறுவனங்களில் வெளி மாநிலங்களில் பணியாற்றியுள்ளேன். உணர்ந்தது யாதெனில் தமிழன் என்றால் நிச்சயம் பளிவாங்கப்படுவான் மற்றும் வஞ்சம் தீர்க்கப்படுவான் என்பது மட்டுமே.

மேலும் வேறு மாநிலங்களில் அரசியல்  மற்றும் வேலைவாய்ப்பு என்று நோக்கினால் தமிழன்  ஒருஅதிகாரத்தில் அல்லது  பதவியில் வீற்றிருப்பதை கண்ணுறுவது அரிதினும் அரிதே...


No comments: